Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பருத்தி விலை கேண்டிக்கு ரூ.4,000 உயர்வு; நூற்பாலைகளுக்கு சிக்கல்

பருத்தி விலை கேண்டிக்கு ரூ.4,000 உயர்வு; நூற்பாலைகளுக்கு சிக்கல்

நடப்பு பருவத்தில் பருத்திக்கான தேவை 3.60 கோடி பேல்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உற்பத்தி 2.60 கோடி பேல்களாக மட்டுமே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் நடப்பு பருத்தி சந்தைப் பருவம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த 10 நாட்களில் பருத்தி விலை கேண்டிக்கு ரூ.4,000 உயர்ந்துள்ளது. ரூ.64,000-ஆக இருந்த விலை தற்போது ரூ.68,000-ஆக அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பருத்திக் கூட்டமைப்பு செயலாளர் நிஷாந்த் ஆஷர் கூறுகையில், "புதிய பருவத்துக்கான பருத்தி வரத்து எதிர்பார்த்த அளவில் இல்லை. அக்டோபர் மாதத்திலேயே விலை இவ்வளவு உயர்ந்திருப்பது வழக்கத்துக்கு மாறானது. உற்பத்தி குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள் கூடுதல் விலைக்காகப் பருத்தியை இருப்பு வைத்திருப்பது, நவம்பர் 1 முதல் இறக்குமதி வரி மீண்டும் அமலுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கலாம்" என்றார்.

தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத் தலைவர் துரை பழனிசாமி கூறுகையில், "கடந்த 2025-26 பருவத்தில் இந்தியாவின் பருத்தி நுகர்வு 3.36 கோடி பேல்களாக இருந்தது. அப்போது 67 லட்சம் பேல்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பருவத்தின் முடிவில் 40 லட்சம் பேல்கள் இருப்பில் இருந்தன. 

நடப்பு பருவத்தில் பருத்திக்கான தேவை 3.60 கோடி பேல்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உற்பத்தி 2.60 கோடி பேல்களாக மட்டுமே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையைப் பூர்த்தி செய்வதில் பற்றாக்குறை ஏற்பட்டு, விலை மேலும் உயரக்கூடும்" என்றார்.

பருத்தி விலை உயர்வால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கலாம். ஆனால், நூற்பாலைகளின் மூலப்பொருள் செலவு அதிகரிப்பதால், சர்வதேச சந்தையில் இந்திய ஜவுளிப் பொருட்களின் போட்டித் திறன் பாதிக்கப்படலாம். 

எனவே, விவசாயிகள் மற்றும் ஜவுளித் தொழில் துறையினர் என இருதரப்பு நலனையும் பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி
திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 16.1 சதவீதம் சரிவு
அடுத்த செய்தி
தங்க நகைக்கடன்: தவணை செலுத்த தவறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்